Saturday 20 December 2014

பாஜகவை பலப்படுத்தாமல் ஓயமாட்டேன்: சென்னையில் அமித்ஷா சூளுரை


பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக உள்ள தமிழகம், கேரளம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தாமல் ஓயமாட்டேன் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட மைதானத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்பதை குறிக்கும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டை போல பொதுக்கூட்ட மேடையை பாஜகவினர் வடிவமைத்திருந்தனர். பொதுக்கூட்டத்தில், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு பேசியதாவது:
‘தமிழில் பேச முடியாததால் மன்னிப்புக் கோருகிறேன். நான் தமிழ் கற்றுவருகிறேன். விரைவில் உங்களிடம் தமிழிலேயே பேசுவேன். தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் 2 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றாலும், 19 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். இதை வைத்து 2016-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை என்று சொல்வேன்.
மோடி பதவியேற்ற 6 மாதத்தில் என்ன செய்துவிட்டார் என்று ராகுல் காந்தி கேட்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன், 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களுக்கு என்ன செய்தது.
தமிழகத்தில் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்ற விருப்பம் தமிழக மக்களுக்கு இருக்கிறது என்றால் பாஜக நிச்சயம் வெற்றி பெரும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்த காங்கிரஸ் மற்றும் திமுக, 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். இதற்கு, அவர்கள் மக்கள் மத்தியில் பதில் கூற வேண்டும்.
ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பெற்ற 6 மாதத்தில் 7 முறை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
7 கடலோர மாநிலங்களில் பாஜக பலமில்லாமல் உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். தமிழகம், கேரளம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தாவிட்டால் அங்கு ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த மாநிலங்களில் பாஜகவை பலப்படுத்தாமல் ஓயமாட்டேன்’ என்று அமித்ஷா பேசினார்.
முன்னதாக பேசிய பாஜகவின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தமிழகத்தில் திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால வரலாற்றை பாஜக மாற்றியமைக்கும். 2016-ல் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும்’ என்றார்.
கூட்டத்தின்போது அமித்ஷா முன்னிலையில், சினிமா இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகைகள் காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி உள்ளட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும்


பாஜகவுக்கு எதிராக கடும் குற்றச் சாட்டுகளை சமீபகாலமாக தெரி வித்துவரும் மேற்கு வங்க முதல் வர் மம்தா பானர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று முன் தினம் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதுவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தின் போது, மோடி, மம்தா சந்திப்பு நிகழ்ந்தது.
மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா பானர்ஜியின் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிரின்ஜோய் போஸ், குணால் கோஷ் ஆகியோரை சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் மாநில அமைச்சர் மதன் மித்ராவும் கைது செய்யப்பட்டார்.
இதனால் கடும் கோபமடைந்த மம்தா பானர்ஜி, பாஜகவை கடுமை யாக விமர்சித்து வருகிறார். பர்த்வான் வெடிகுண்டு வழக்கு, நாட்டின் சில பகுதிகளில் மதரீதி யாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை ஆகியவை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதற்கு பதிலடி தரும் வகையில் பாஜக தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு விருந்தளித்தார். இந்நிகழ்ச் சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவ்விருந்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, அங்கு வந்திருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பாஜகவில் கங்கை அமரன்


இளையராஜாவின் சகோதரரும் திரை இசையமைப்பாளருமான கங்கை அமரன் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் நாளை (சனிக்கிழமை) பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், கங்கை அமரன் பாஜகவில் இணையவிருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, இன்று காலை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை அவர் சந்தித்தார். இதனால், அவர் பாஜகவில் இணையப்போவது உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாஜகவில் இணைகிறார் நெப்போலியன்


திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை இன்று சந்தித்து அக்கட்சியில் இணைகிறார்.

‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையு லகில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரான இவர், பல ஆண்டு களாக திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கே.என்.நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மு.க.அழகிரியின் ஆதரவாளராக மாறினார் நெப்போலியன்.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டபோது, அவரது வீட்டுக்கே சென்று ஆதரவை தெரிவித்தார். இதனால், கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நெப்போலியன், அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில், அவரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சி நிர்வாகிகள் முயன்றனர். ஆரம்பத்தில் நழுவிய நெப்போலியன், கட்சியிலும் தேர்தலிலும் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் பாஜகவில் சேர ஒப்புக் கொண் டுள்ளார்.

இதுதொடர்பாக நெப்போலி யனுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “திமுகவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. மோடியின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாஜக தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பை நீண்ட யோசனைக்கு பிறகு நெப்போலியன் ஏற்றுக் கொண் டுள்ளார். நாளை (21-ம் தேதி) காலை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து முறைப்படி அக்கட்சியில் இணைகிறார்” என்றனர்.

திமுகவில் இருந்து விலகல்
பாஜகவில் சேர முடிவு செய்துள்ள நெப்போலியன், திமுகவில் இருந்து விலகுவதாக கட்சித் தலைமைக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘கடந்த 35 ஆண்டுகளாக நான் பணியாற்றிய, என்னை உருவாக்கிய திமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன். இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Wednesday 25 December 2013

இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய்


இந்தியாவின் பிரதமராக 3 முறை பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய், தனது 89-வது பிறந்த நாளை இன்று எளிமையாக கொண்டாடினார்.

25-12-1924 அன்று குவாலியரில் பிறந்த வாஜ்பாய், வெள்ளயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்று முதல் தீவிர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி. ஆனார்.

அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடணப்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்து போராடி, கைதாகி சிறை சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.

பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது.

திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.

அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

இம்முறை 5 ஆண்டுகாலம் தனது பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார். 

தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.

2004-ம் ஆண்டு தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பூரண ஓய்வில் இருக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய், இன்று தனது 89-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் அவருக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

Sunday 10 November 2013

நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான்

நாட்டை துண்டாடியதன் மூலம் இந்தியாவின் புவியில் அமைப்பை மாற்றிய பாவத்தை காங்கிரஸ் கட்சி தான் செய்தது என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான்: மோடி பகிரங்க குற்றச்சாட்டு

linkwithin

ilamthamarai